ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா கொலை வழக்கு.. கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா கொலை வழக்கு.. கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

விஸ்மயா வரதட்சணை மரணம் வழக்கு

விஸ்மயா வரதட்சணை மரணம் வழக்கு

Vismaya dowry case - திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, மாப்பிள்ளை கிரண் குமாருக்கு 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை வரதட்சணையாகத் தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரளாவில் விஸ்மயா என்ற பெண் வரதட்சனை கொடுமை காரணமாக உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் கிரண் குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின்  கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் 22 பெண் வயது விஸ்மயா. மருத்துவம் படித்த இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண் குமார் என்பவருக்கும் 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, மாப்பிள்ளை கிரண் குமாருக்கு 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை வரதட்சணையாகத் தந்துள்ளார்.

இவ்வளவையும் பெற்றுக்கொண்ட பின்னருக்கு கிரண் குமார், தனக்கு கார் பிடிக்கவில்லை எனவே தனக்கு ரூ.10 லட்சம் பெண் வீட்டார் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். தன்னால் இனிமேல் பணம் தர முடியாது என பெண்ணின் தந்தை கூறவே, மனைவி விஸ்மயாவை கணவர் கிரண் குமார் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி மர்மான முறையில் விஸ்மயா  வீட்டில் உயிரிழந்துள்ளார். இதற்கு முதல் நாள் தான் விஸ்மயா கணவர் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் உறவினருக்கு பகிர்ந்துள்ளார். கேரளாவையே உலுக்கிய இந்த வரதட்சணை  கொடுமை சம்பவத்தை அடுத்து, கிரண் குமார் கைது செய்யப்பட்டார். அவரை அரசு பணியில் இருந்து மாநில அரசு டிஸ்மிஸ் செய்தது.

இதையும் படிங்க: தமிழ் எழுத்துக்கள் மூலம் ஓவியம்.. வியந்து பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

கிரண் குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து 500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக 42 சட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, 108 ஆவணங்கள், சில தொலைப்பேசி அழைப்பு பதிவுகளையும் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்பித்தது. வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விஸ்மயா மரணத்தில் கணவர் கிரண் குமார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. குற்றவாளியின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி சுஜித் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Dowry, Dowry Cases, Kerala