உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் காலமானார்!

உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் காலமானார்!
விஷ்வேசா தீர்த்த சுவாமி
  • News18
  • Last Updated: December 29, 2019, 1:45 PM IST
  • Share this:
உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார்.

கர்நாட்கா மாநிலம் பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடிருந்தார். 88 வயதான அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிக்சைக்கு ஒத்துழைக்காத அளவிற்கு உடல் மோசமான நிலைக்கு சென்றதால், மருத்துவமனையில் இருந்து மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவரின் உயிர் பிரிந்தது.


இதையடுத்து, உடுப்பி மடத்திற்கு வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக தலைவா உமா பாரதி உள்ளிட்டோர் ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள், பெஜாவர் மடத்திலேயே இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்து மத நல்லிணக்கத்துக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்க பாடுபட்டவர்.

பல்வேறு இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இந்திய அளவில் அனைத்து மதத்தினராலும் மதிக்கப்பட்ட மடாதிபதியாக விளங்கினார்.
First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading