• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விளம்பரங்கள் மூலம் 237.7 மில்லியன் டாலர்கள் வருவாய்.. 4-வது முறையாக மதிப்புமிக்க பிரபலமாக ஜொலிக்கும் விராட் கோலி..

விளம்பரங்கள் மூலம் 237.7 மில்லியன் டாலர்கள் வருவாய்.. 4-வது முறையாக மதிப்புமிக்க பிரபலமாக ஜொலிக்கும் விராட் கோலி..

விராட் கோலி

விராட் கோலி

பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி 4-வது முறையாக முதலிடம் பிடித்த பெருமையும் இவருக்கு தான். இதுதவிர மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் தான் திரையுலக பின்னணி இல்லாத பிரபலங்களாக உள்ளனர்.

  • Share this:
விராட் கோலி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஒரு சிறந்த பிராண்ட் மாடலாக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது சமூக ஊடக பயன்பாடு, பிராண்ட் நிறுவங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் கிரிக்கெட் மூலம் அவர் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் ஆகியவை அவரது ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இதனாலேயே விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டிபோட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்த நேரத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது, விராட் கோலி 2020-ம் ஆண்டில் தொடர்ச்சியாக நான்காவது முறை மிகவும் மதிப்புமிக்க பிரபலம் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

அவரது பிராண்ட் மதிப்பு மட்டும் 237.7 மில்லியனாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1732 கோடிக்கும் மேல் இருக்கும். மேலும், இந்த பட்டியலில் பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி 4-வது முறையாக முதலிடம் பிடித்த பெருமையும் இவருக்கு தான். இதுதவிர மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் தான் திரையுலக பின்னணி இல்லாத பிரபலங்களாக உள்ளனர். அதே பட்டியலில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் அக்‌ஷய் குமார் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருக்கு சென்றுள்ளன. 2020-ம் ஆண்டில் மிகவும் மதிப்புமிக்க முதல் பத்து பிரபலங்களில், இரண்டு பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 

மேலும், அதே பட்டியலில் உள்ள மற்ற பிரபலங்களின் பிராண்ட் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கோலியின் பிராண்ட் மதிப்பு மட்டும் அப்படியே உள்ளது. இது தொடர்பாக, பிராண்ட் மதிப்பீட்டில் நிபுணத்துவம் பெற்ற டஃப் அண்ட் பெல்ப்ஸ் குறிப்பிட்டதாவது, கோலியின் பிராண்ட் அப்படியே இருந்தபோதிலும், கடந்த ஆண்டை விட முதல் 20 பிரபலங்கள் தங்களின் ஒருங்கிணைந்த மதிப்பில் 5 சதவீதத்தை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதாரத்தில் பல அதிர்ச்சியூட்டும் விளைவுகள் இருந்தபோதிலும், கோலியின் பிராண்ட் மதிப்பு குறையவில்லை. 

2020-ம் ஆண்டில் முதல் 20 பிரபலங்களின் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மேலும் இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தொற்றுநோய் காரணமாக 5 சதவீதம் சரிந்துள்ளது. அவர்களின் விளம்பர ஒப்பந்தங்கள் ஒப்புதல் மற்றும் சமூக ஊடக பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு பிராண்ட் மதிப்பு தரவரிசை மற்றும் பிரபலங்களின் ஒப்பந்தங்கள் ஆகிய இரு காரணிகளிலும் தொற்றுநோயின் தாக்கத்தை மதிப்பீடு செய்தது. 

வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளதால் தொற்றுநோய்களின் போது அவர்களின் தேவை அதிகரித்திருந்தது என டஃப் மற்றும் பெல்ப்ஸின் எம்.டி. தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிராண்ட் மதிப்பு பட்டியலில் எம்.எஸ் தோனியின் வருமானம் சுமார் ரூ.262 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அக்‌ஷய் குமாரின் பிராண்ட் மதிப்பு ரூ.860 கோடி, ரன்வீர் சிங் ரூ.740 கோடி, ஷாருக்கான் ரூ.371 கோடி, தீபிகா படுகோனே ரூ.364 கோடி என பட்டியலில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: