மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை கருப்பு தண்ணீரை அருந்தும் பிரபலங்கள் - விலை எவ்வளவு தெரியுமா?

விராட் கோலி

வழக்கமான தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்பு, 6.5-7.5 pH அமிலம் இருக்கும்

  • Share this:
கருப்பு தண்ணீர் தற்போது பிரபலமடைந்து வருகிறது. எண்ணற்ற திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கருப்பு தண்ணீரை அருந்தி வருகின்றனர். குறிப்பாக மலைக்கா அரோரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உட்பட பல பி-டவுன் நட்சத்திரங்கள் கருப்பு தண்ணீர் அருந்துகின்றனர். பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் புதிய உடற்பயிற்சி நேரங்களில் இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது ஜிம்மில் கருப்பு தண்ணீரை அருந்தியவாறு ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் இந்த "கருப்பு தண்ணீரை நான் அருந்தும்போது மிகவும் உற்சாகமாக உணர்கிறேன், இது தண்ணீரைப் போலவே சுவைக்கிறது" என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். 
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


விளையாட்டு வீரர்களிடையே கூட இந்த கருப்பு தண்ணீர் பிரபலமாகி வருகிறது, சமீபத்தில் விராட் கோலி கூட கருப்பு தண்ணீர் அருந்தி வருவது தெரியவந்தது. ஆனால் இந்த கருப்பு தண்ணீர் ஒரு லிட்டர் விலை ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Also Read: சென்னையில் ரயில்வே போலீசாரை கிண்டல் செய்து நடனமாடிய பெண் - வைரல் வீடியோ

இதுகுறித்து விளக்கிய பாட்டியா மருத்துவமனை உணவியல் துறை தலைவர் டாக்டர் பூஜா தாக்கர் கருப்பு தண்ணீர் என்பது ஃபுல்விக் அமிலம் (FvA) மற்றும் சில கனிமங்கள், வைட்டமின் கொண்ட நீர் என விளக்கம் அளித்துள்ளார். இந்த தண்ணீர் நீரேற்றத்துடன் இருக்கவும், pH அளவு மற்றும் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது என்றும் அவர் கூறினார். இது எனர்ஜி பானம், ஃபுல்விக் பானம் என்றும் அழைக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாரெல்லாம் குடிக்கலாம்?

வழக்கமான தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்பு, 6.5-7.5 pH அமிலம் இருக்கும். ஆனால் கருப்பு தண்ணீரின் pH அளவு 7.5ஐ விட அதிகமாக உள்ளது என்று குர்கிராமின் நாராயண சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் டாக்டர் பர்மீத் கவுர் விளக்கியுள்ளார். இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளதால் நம் உடலில் இருந்து அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது மைக்ரோ-க்ளஸ்ட்டர் ஆகும், எனவே இது உயிரணுக்களுக்குள் எளிதில் உறிஞ்சப்பட்டு அதன் மூலம் சிறந்த நீரேற்றத்தை வழங்குகிறது. கறுப்பு தண்ணீரில் அதிக pH மற்றும் காரத்தன்மை இருப்பதால், அது சாதாரண தண்ணீரை விட குறைவான அமிலத்தன்மை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணம் மாயம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கருப்பு தண்ணீரின் நன்மைகள் :

கறுப்பு தண்ணீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் அல்சைமர் நோயிலிருந்து பாதுகாத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த கருப்பு நீரானது சாதாரண நீரை காட்டிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. இந்த நீரில் இயற்கையான கருப்பு காரச்சத்து உள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, இந்த கருப்பு நீர் சருமத்திற்கும் மிக ஆரோக்கியமானது என்றும் கூறுகின்றனர்.

குறிப்பு : கருப்பு தண்ணீர் குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: