உ.பியில் போக்சோ சட்டத்தில் கைதானவர் தப்பியோட்டம் - வைரலாகும் வீடியோ

மாதிரி படம்

உத்தரபிரதேசத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர், சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும்போது தப்பிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் மித்தவ்லி என்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஹிராலால் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். லக்கிம்பூர் மாவட்ட சிறையில் அடைக்க இருசக்கர வாகனத்தில் ஹிராலாலை போலீசார் அழைத்துச் சென்றனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப பைக்கை நிறுத்தியபோது, திடீரென ஹிராலால் கைவிலங்குடன் தப்பி ஓடினார்.

    தப்பி ஓடியவரை பிடிக்க போலீசார் விரட்டி ஓடினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஹிராலாலைப் பிடித்துவிடுவோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Rizwan
    First published: