நாட்டின் பல்வேறு மாநிலங்கள் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் கனமழை பாதிப்பு ஏற்படும் போது, சாலைகளில் வெள்ள நீர் வடிகால் முறையாக இல்லாததால் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்வது போன்ற பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதேவேளை, இது போன்ற பாதிப்புக்களை எதிர்கொள்ளும் மக்கள் தங்கள் தேவை, சூழலுக்கு ஏற்ப வித்தியாசமான செயல்களை செய்து பிரச்னைகளை சமாளிப்பதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று அனைவரையும் அசரவைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 14 முறை கட்டாய கருக்கலைப்பு - லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பார்ட்னரின் மீதான விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்..
இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் மும்பை நகர போக்குவரத்தின் உயிர் நாடியாக விளங்கும் லோக்கல் மின்சார ரயில் போக்குவரத்து சேவை தடையில்லாமல் இயங்கி வருகிறது. இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது துணிகளை ரயிலுக்குள்ளேயே காயவைத்து அனைவரையும் அசர வைத்துள்ளார்.
View this post on Instagram
தனது வீட்டில் துணி காயவைப்பது போலவே, ரயில் பெட்டிக்குள் உள்ள கம்பிகளின் மேல் தனது துணிகளை போட்டு அவற்றை காய வைத்துள்ளார் அந்த பயணி. இதை யாரோ ஒரு சக பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள தாதர்மும்பைகார் என்ற பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு அதற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் கிடைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monsoon rain, Mumbai, Urban Train, Viral Video