முகப்பு /செய்தி /இந்தியா / தேசிய கீதம் பாடும்போது ஜாலி நடனம்.. இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்.. நண்பர்களுக்கு வலை..!

தேசிய கீதம் பாடும்போது ஜாலி நடனம்.. இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்.. நண்பர்களுக்கு வலை..!

தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்த இளைஞர்

தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்த இளைஞர்

வீடியோவில் இருந்த அத்னான், ருஹால் மேலும் ஒரு இளைஞர் ஆகிய மூவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நாடு முழுவதும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டால் அபராதமும், அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவர் தேசிய கீதம் பாடும் போது அதை அவமதிக்கும் விதமாக ஜாலியாக நடனமாடி நண்பருடன் சிரிந்து குதித்துக்கொண்டிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வாலிபர் தேசிய கீதம் பாடும் போது நடனமாடும் 29 நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. குடியரசு தினத்தன்று இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை கவனத்திற்கு இது சென்றது.

அதன்பேரில், வீடியோவில் இருந்த அத்னான், ருஹால் மேலும் ஒரு இளைஞர் ஆகிய மூவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்னானை காவல்துறை கைது செய்த நிலையில், மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகிறது. இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கோரி இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பினர் மீரட்டின் ரயில்வே ஸ்டேஷன் ரோட் பகுதியில் போராட்டம் நடத்தினர்.

First published:

Tags: Meerut S24p10, Uttar pradesh, Viral Video