Home /News /national /

சீற்றத்துடன் படமெடுத்த பாம்பு... மகனை நொடி பொழுதில் காப்பாற்றிய தாய்: வைரலாகும் வீடியோ

சீற்றத்துடன் படமெடுத்த பாம்பு... மகனை நொடி பொழுதில் காப்பாற்றிய தாய்: வைரலாகும் வீடியோ

நகப் பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாய்

நகப் பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாய்

தாய்யின் சமயோஜிதமான தைரியமான நடவடிக்கையை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கர்நாடகா மாநிலத்தில் தாய் ஒருவர் நாகப்பாம்பிடம் இருந்து மகனை காக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நிகழ்ந்துள்ள நிலையில், இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    சிசிடிவியில் பதிவான காட்சியில்,  நாகப் பாம்பு ஒரு வீட்டின் வாசலிலேயே இருந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. அப்போது அந்த வீட்டில் இருந்து ஒரு பெண்மணியும் அவரது சிறு வயது மகனும் வெளிய வந்துள்ளனர். பாம்பு வழியில் நகர்வதை கவனிக்காமல் அந்த பாம்பை சிறுவன் மிதிக்க இருந்துள்ளார். இரண்டு அடி சென்ற பின்னர் பாம்பு இருப்பதை பார்த்து சிறுவன் பயந்து விடுகிறான். பாம்பும்  படமெடுத்தபடி தலையை தூக்கியது. இதை கவனித்த தாயார் கண் இமைக்கும் நொடி பொழுதில்  சிறூவனை தூக்கி கையில் எடுத்துக்கொண்டு பாம்பிடம் இருந்து  காப்பாற்றியுள்ளார். பாம்பும் ஏதும் செய்யாமல் தானாக நகர்ந்து சென்று விடுகிறது.


    இந்த பரபரப்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்யின் சமயோஜிதமான தைரியமான நடவடிக்கையை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல்,மழை காலங்களில் மக்கள் சாலைகளில் கவனத்துடன் நடக்க வேண்டும் என எச்சரித்து வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Karnataka, Snake, Viral Video

    அடுத்த செய்தி