பட்டப்பகலில் காவலர் ஒருவர் போதையில் கலாட்டா செய்து தனது சீருடைகளை கழற்றி சாலையில் வீசி எறிந்த அதிர்ச்சி சம்பவம் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹ்தா என்ற காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் சுஷில் மன்டாவி. இவர் நேற்று மத்திய வேலையில் குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள கடை பகுதிகளுக்கு போதையில் கலாட்டா செய்துள்ளார்.
அவரிடம் அங்குள்ள சில பொதுமக்கள் கலாட்டா செய்ய வேண்டாம் வீட்டிற்கு போங்கள் என்று அறிவுறுத்திய போதும் அதை கேட்காமல் போதையில் தொடர்ந்து ஆட்டம் போட்டார். அதோடு நிற்காமல் அங்கு சாலையிலேயே அமர்ந்துகொண்டு தனது காவலர் சீருடை கழற்றி அங்கிருந்தவர்கள் மீது வீசி எறிந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார் காவலர் சுஷில்.
हरदा- #पुलिसकर्मी ने खाकी को किया दागदार, #ऑनड्यूटी शराब के नशे में धुत आया नजर, लोगों ने नशे में धुत पुलिसकर्मी का बनाया #वीडियो, #वायरल होने पर की गई #निलंबन की कार्रवाई #Mpnews #Harda #police #sharab #suspend pic.twitter.com/QTBw5q4xTu
— News18 MadhyaPradesh (@News18MP) December 24, 2022
இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகின. காவலர் ஒருவரே இவ்வாறு போதையில் கலாட்டா செய்த சம்பவம் அங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவலர் சுஷில் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் மனிஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வங்கி கொள்ளைக்கு பக்கா ஸ்கெட்ச்..10 அடி நீள சுரங்கம் தோண்டி 2 கிலோ தங்கம் திருட்டு
ஆறு மாதத்திற்கு முன்னர் இவர் மதுபோதையில் இருக்கும்போது விபத்து ஆளானதாகவும், எனவே முறையான கவுன்சிலிங் எடுக்க காவல்துறை அறிவுறுத்தியதாகவும் எஸ்பி மனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Police, Police suspended, Viral Video