• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தலைமீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய நபர் - வைரல் வீடியோ

தலைமீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய நபர் - வைரல் வீடியோ

தலைமீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய நபர் - வைரல் வீடியோ

தலைமீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய நபர் - வைரல் வீடியோ

தலைக்கவசம் அணிந்தபடி சென்ற இருசக்கர வாகன ஓட்டியின் தலை மீது டிராக்டர் ஏறி இறங்கியபோதும் உயிர்தப்பிய அதிசயம் நடந்துள்ளது.

  • Share this:
    குஜராத் மாநிலம் தஹோத் நகரில் ஒரு ஆணும், கையில் குழந்தையுடன் ஒரு பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் பாதி வரை மழைநீர் தேங்கியிருந்ததால் எதிர்த்திசையில் வந்த டிராக்டரை ஒட்டி அந்த நபர் சென்றார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே பைக் சாய்ந்தது.

    அதில் பைக்கில் பயணித்த மூவரும் டிராக்டரின் சக்கரத்துக்கு அடியில் விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற நபரின் தலைமீது டிராக்டர் டயர் ஏறி இறங்கியது. அனைவரும் சத்தம் போடவே டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். டிராக்டர் ஏறி இறங்கிய பிறகும் சிறு காயங்களுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் உயிர்தப்பினார்.



    தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது என்ற பழமொழிக்கு ஏற்ப அவரது உயிரை அவரது வலுவான ஹெல்மெட் காப்பாற்றியது. ஒரு தலைமுறையையே தலைக்கவசம் காப்பாற்றும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    Also Read : ‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் சொன்ன காரணம்!

    சமூக வலைதளங்களில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சியும் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற குழந்தையும், பெண்ணும் காயமின்றி தப்பினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: