Viral Video : ரயில் புறப்படும் போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 70 வயது முதியவர்... நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவத்தால் குவியும் பாராட்டு!

70 வயது முதியவர்

மத்திய ரயில்வே பொது மேலாளர் அலோக் கன்சால், அந்த நபரைக் காப்பாற்றிய மூன்று ரயில்வே ஊழியர்களுக்கு தலா ரூ. 2000 ரொக்கப் பரிசை அறிவித்தார்.

  • Share this:
    மும்பையின் கல்யாண் ரயில் நிலையத்தில் நேற்றைய தினம் மதியம் 12.30 மணி அளவில் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்படும் போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஹரி சங்கர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தார். முதியவர் தண்டவாளத்தில் விழுந்ததை அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் சந்தோஷ் குமார் கவனித்தார். உடனடியாக அவர், ரெயில் என்ஜின் டிரைவர்களை நோக்கி சத்தம் போட்டார்.

    லோகோ பைலட் எஸ்.கே.பிரதன் மற்றும் அவரது உதவியாளர் ரவிசங்கர் ஜி ஆகியோர் ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அவசர பிரேக்கை அழுத்தினார்.

     

     



     

    பின்னர் முதியவர் தண்டவாளத்திற்கும், ரெயில் என்ஜினுக்கும் இடையே மாட்டி கிடந்தததை கண்டு உடனடியாக மீட்டு அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    இதையடுத்து மத்திய ரயில்வே பொது மேலாளர் அலோக் கன்சால், அந்த நபரைக் காப்பாற்றிய மூன்று ரயில்வே ஊழியர்களுக்கு தலா ரூ. 2000 ரொக்கப் பரிசை அறிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: