ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஸ்விக்கி பையுடன் 20 கிமீ நடை.. குடும்பத்தை தனி ஒருத்தியாய் காப்பாற்றும் நம்பிக்கை தாயின் கதை!

ஸ்விக்கி பையுடன் 20 கிமீ நடை.. குடும்பத்தை தனி ஒருத்தியாய் காப்பாற்றும் நம்பிக்கை தாயின் கதை!

ஸ்விக்கி பையுடன் ரிஸ்வானா

ஸ்விக்கி பையுடன் ரிஸ்வானா

நாள்தோறும் 20 கிமீ நடந்தே சென்று வேலை பார்த்த ரிஸ்வானா, தனது சராசரி மாத வருவாயான ரூ.8,000ஐ நம்பித்தான் தனது மொத்த குடும்பமும் உள்ளதாக கூறுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

சாலையில் புர்கா அணிந்த பெண் ஒருவர் ஸ்விக்கி உணவு டெலிவரி பையை தூக்கி நடக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலானது. யார் அந்த பெண் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஆர்வம் தோன்றி, அதன் பின்னணியை தேடி பார்த்தபோதுதான் தனி ஒருத்தியாக போராடி 3 குழந்தைகளை பேணி வளர்க்கும் தாயின் உண்மை கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஜன்தா நகரி பகுதியைச் சேர்ந்த பெண் ரிஸ்வானா. 40 வயதான ரிஸ்வானாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ரிஸவானாவின் மூத்த மகளுக்கு தற்போது 22 வயதாகிறது. நான்காவது பிள்ளைக்கு 7 வயதாகிறது. மிக இளம் வயதிலேயே ரிஸ்வானாவுக்கு திருமணமான நிலையில், அவரின் கணவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஆட்டோ திருடப்பட்ட நிலையில், தனது பிழைப்பை இழந்த ரிஸ்வானாவின் கணவர் குடும்பத்தை கைவிட்டு ஓடி தலைமறைவானார்.அதன் பின்னர், தனி நபராய் குடும்பத்திற்காக போராடி வருகிறார் ரிஸ்வானா. நாள்தோறும் கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துதான் தனது பிள்ளைகளை இவர் வளர்த்து வருகிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் அருகே உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்யும் ரிஸ்வானா, பகல் பொழுதில் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு டீ, காபி கப்புகளை விற்பனை செய்து வருகிறார்.

வீட்டு வேலை செய்வதன் மூலம் ரிஸ்வானாவுக்கு மாதம் ரூ.1,500 கிடைக்கிறது. அதேபோல், தினமும் சுமார் 20-25 கிமீ நடந்து சென்று டீ,காபி கோப்பைகள் விற்பதன் மூலம் மாதம் ரூ.5,000இல் இருந்து ரூ.6,000 கிடைப்பதாக ரிஸ்வானா கூறுகிறார். இந்த கோப்பைகளை சுமந்து செல்வதற்காக தான் ஒரு ஸ்விக்கி டெலிவரி பையை அவர் அங்குள்ள சந்தையில் ஒரு நபரிடம் வாங்கியுள்ளார். அதை ரிஸ்வானா சுமந்துகொண்டு சாலையில் நடந்தபோது ஒரு நபர் எடுத்த புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதையும் படிங்க: பஜ்ஜி முதல் பிரியாணி வரை.. 173 வகை உணவுகள்.. மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார்..!

பயண செலவை குறைக்க நாள்தோறும் 20 கிமீ நடந்தே செல்லும் ரிஸ்வானா, தனது சராசரி மாத வருவாயான ரூ.8,000ஐ நம்பித்தான் தனது மொத்த குடும்பமும் உள்ளதாக கூறுகிறார். கடினமான சூழலிலும் 22 வயதான மூத்த மகள் லுபானாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் ரிஸ்வானா. தற்போது 10க்கு 10 அறையில் இரு மகள்கள் ஒரு மகனுடன் இவர் வாழ்ந்து வருகிறார்.

இவர் ஸ்விக்கி பையை சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அதை பர்த்து சில நபர்கள் தனக்கு நிதியுதவி செய்ததாக ரிஸ்வானா தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் வைரலான ஒரு புகைப்படத்தின் மூலம் தன்னம்பிக்கையோடு போராட்டும் ரிஸ்வானா என்ற தாயின் வாழ்க்கை சமூகத்தின் முன் தற்போது கவனம் பெற்றுள்ளது.

First published:

Tags: Muslim, Swiggy, Viral News