ஹோம் /நியூஸ் /இந்தியா /

230 கி.மீ வேகம் பத்தல, 300-ல ஓட்டு... பேஸ்புக் லைவ்வில் மாஸ் காட்ட நினைத்து மரணத்தை தழுவிய சோகம்

230 கி.மீ வேகம் பத்தல, 300-ல ஓட்டு... பேஸ்புக் லைவ்வில் மாஸ் காட்ட நினைத்து மரணத்தை தழுவிய சோகம்

BMW சொகுசு காரில் பயணம்

BMW சொகுசு காரில் பயணம்

ஒரு நண்பர் குஷியில் என்ன ஸ்பீடுப்பா நாமா நாலு பேரும் சாகத்தான் போறோம் போல, வண்டிய 300 கிமீ வேகத்துக்கு விடு என்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  BMW சொகுசு காரில் 300 கிமீ வேகத்தில் பயணிக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவர் தனது நண்பர்கள் தீபக் குமார், அகிலேஷ் சிங், முகேஷ் ஆகியோருடன் தனது BMW சொகுசு காரில் டெல்லிக்கு சென்றுள்ளார்.

  இவர்கள் நால்வரும் உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் காரில் வேகமாக பயணித்துள்ளனர். தனது சொகுசு காரின் ஸ்பீடையும், பயணம் செய்யும் ஸ்டைலையும் ஊருக்கு காட்ட வேண்டும் என்ற ஆசையில் பேஸ்புக் லைவ் எடுத்துக்கொண்டே ஆனந்த் பிரகாஷ் வாகனம் ஓட்டியுள்ளார். லைவ்வில் அவரது நண்பர் காரின் ஸ்பீடோமீட்டரை வைத்து வேகத்தை சுட்டிக்காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் கார் 200 கிமீ வேகத்தை கடந்து பயணிக்க தொடங்கியது.

  இன்னும் வேகம் இன்னும் வேகம் என நண்பர்கள் பின்னிருந்து குரல் கொடுக்க 210, 215, 220 கிமீ என மெல்ல வேகத்தை அதிகரித்து ஓட்டித்தொடங்கினார் ஆனந்த். ஒரு நண்பர் குஷியில் என்ன ஸ்பீடுப்பா நாமா நாலு பேரும் சாகத்தான் போறோம் போல. வண்டிய 300 கிமீ வேகத்துக்கு விடு என்றார். அவர் வாய்ச்சொல் பலித்தது போல, அடுத்த சில நொடிகளிலேயே கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இதையும் படிங்க: துரந்தோ ரயிலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளையர்கள் அட்டூழியம்.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

  கண்டெய்னரை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவயிடத்தில் இருந்து தப்பி தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சுல்தான்பூர் காவல்துறை நால்வரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Accident, BMW car, Car accident, Expressway, Uttar pradesh, Viral Video