Home /News /national /

கடப்பாவில் தர்கா சமாதி அசைந்ததாக தகவல்.. வைரலான வீடியோவால் பரபரப்பு

கடப்பாவில் தர்கா சமாதி அசைந்ததாக தகவல்.. வைரலான வீடியோவால் பரபரப்பு

கடப்பா தர்கா சமாதி அசைந்ததாக பரபரப்பு

கடப்பா தர்கா சமாதி அசைந்ததாக பரபரப்பு

சமாதியின் ஒரு பகுதி அசைவதாக கருதிய பக்தர்கள் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    கடப்பா மாவட்டம் குடுமஸ்தான் வள்ளி தர்கா சமாதி நேற்று இரவு அசைந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு நகரம் அருகே பென்னா நதிக்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தர்காவில் குடுமஸ்தான் வள்ளி சமாதி உள்ளது.  தினமும் அங்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று இரவு அன்னதானம் நடைபெறும். இந்த நிலையில் நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து வழிபாடு நடத்தி உணவு அருந்தி சென்றனர்.

    அப்போது சமாதியின் ஒரு பகுதி அசைவதாக கருதிய பக்தர்கள் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனால் ஏராளமான அளவில் பக்தர்கள் அங்கு இரவு முழுவதும் குவிந்தனர்.

    இது பற்றி கருத்து கூறிய சமூக ஆர்வலர்கள் இறை நம்பிக்கை என்பது வேறு,மூடநம்பிக்கை என்பது வேறு. தங்களுக்கு இருக்கும் அதீத இறை நம்பிக்கை காரணமாக பக்கர்களின் மனது அவர்களை அறியாமலேயே மூடநம்பிக்கைக்குள் சென்று விடுகிறது.

    இதையும் படிங்க: ஆளும்கட்சி பெண் எம்எல்ஏவை கன்னத்தில் அறைந்த கணவர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

    இது போன்ற தகவல்கள் அதீத இறை நம்பிக்கை காரணமாக ஏற்பட்ட மூடநம்பிக்கையை ஆகும். வேறு ஒன்றும் கிடையாது என்று கூறுகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Video gets viral

    அடுத்த செய்தி