திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் நடக்கிறது. அதில் அனைத்துத் தென் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆகையால் 13, 14 மற்றும் 15ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Must Read : அதிக மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் அனைத்து மதகுகளையும் திறந்து தான் ஆக வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.