”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...

முகநூல் பதிவை எழுதி கலவரத்தைத் தூண்டிய நவீனின் தாயாரை முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...
ஃபேஸ்புக் பதிவால் கலவரம் தூண்டிய நவீனின் தாய் ஜெயந்தி
  • Share this:
பெங்களூருவில் கலவரத்துக்கு காரணமான முகநூல் பதிவை எழுதிய நவீனின் தாயாரை முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவீன் என்னும் நபரின் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு காரணமாக பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெரும் கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதிய நவீனின் தாயாரும் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சகோதரியுமான ஜெயந்தி கூறுகையில், “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நானும் என் மகளும் வீட்டில் டி.வி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு இருந்தோம். சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைய முயன்றார்கள்.


உள்பக்கமாக பூட்டுப்போட்டுக்கொண்டு பேரப்பிள்ளைகளை தூக்கிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அதற்குள் வீட்டுக்குள் நுழைந்து கார், இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு தீவைத்து விட்டுச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் எங்கள் பக்கத்து வீடுகளைசேர்ந்த 5 முஸ்லிம் இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை காப்பாற்றினார்கள்.

மேலும் படிக்க: 15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..

பக்கத்து வீட்டில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் மட்டும் தக்க தருணத்தில் வரவில்லை என்றால், நான் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த முஸ்லீம் இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. எங்கள் அனைவரின் உயிரை காப்பாற்றி காரில் ஏற்றிவிட்ட அந்த இளைஞர்களை பார்த்த கலவர கும்பல், நீங்கள்மதத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.வன்முறையாளர்களையும், வீட்டுக்கு வந்து சேதப்படுத்தி, தீ வைத்தவர்களையும் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்த வன்முறைக்கு காரணம் என் மகனின் முகநூல் பதிவு மட்டும் அல்ல. ஒரு முகநூல் பதிவுக்காக ஊரில் உள்ள அப்பாவி பொதுமக்களை தாக்கி, அவர்களின் உடைமைகளை எரிப்பதற்கு அவர் யார்? அரசியல் ரீதியாக என் தம்பி அகண்ட சீனிவாச மூர்த்தியை அழிக்கும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரத்தை செய்திருக்கிறார்கள். போலீஸார் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading