குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நனவானது காந்தியின் கனவு - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நனவானது காந்தியின் கனவு - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • Share this:
”நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்து மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கி இருப்பதற்காக நான் மகிழ்கிறேன்” என தனது உரையில் தெரிவித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பட்ஜெட் தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இரு சபைகளின் இணைந்த கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து பங்கேற்றிருக்கும் இக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “வரவிருக்கும் 10 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. பாபர் மசூதி தீர்ப்புக்குப் பிறகு நாட்டுமக்கள் நடந்து கொண்ட விதமும், காத்த அமைதியும் பாராட்டுக்குரியது.


இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானில் வாழ விரும்பாத ஹிந்துக்களும், சீக்கியர்களும் இந்தியாவுக்கு திரும்பலாம் என மகாத்மா காந்தி தெரிவித்திருந்தார். அவர்களுக்கு ஒரு இயல்பான வாழ்க்கையை அமைத்துத்தரும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்து அவரது கனவை நனவாக்கி இருப்பதற்காக நான் மகிழ்கிறேன். போராட்டங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகளால் சமூகமும், நாடும் வலுவிழக்கும்.

அரசு, பலமான நாட்டுக்கான அடித்தளத்தை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிறது” என்று பேசியுள்ளார்.

முன்னதாக “பொருளாதாரம் குறித்த நேர்மறையான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading