மும்பையில் நாய்கள் மீது அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி தகவல்!

நாய் (கோப்பு படம்)

பாலியல் வன்கொடுமை, அடித்துக் கொலை செய்தல் என கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் மீதான வன்முறை பன்மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
மும்பை, கொரேகான் பகுதியில் மார்ச் 28-ம் தேதி நாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் ஒருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். இருப்பினும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி, பெண் நாய்களை வலுக்கட்டாயமாக பிடித்து உடலுறவில் ஈடுபட்ட சீரியல் ரேப்பிஸ்டை டி.என்.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். எட்டுக்கும் மேற்பட்ட பெண் நாய்களுடன் அந்த நபர் உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

சந்திவலி பகுதியில் மார்ச் 4-ம் தேதி நாய் ஒன்றை மக்கள் அடித்து கொலை செய்தனர். இதுதொடர்பாக சகிநகா( sakinaka) காவல்துறையினர் சட்டப்பிரிவு 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் போவாய் (Powai) பகுதியில் நாய் ஒன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தது. மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தும் லாக்டவுனுக்குப் பிறகு நாய்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் ஒரு சில சம்பவங்கள். இதுகுறித்து பேசிய மும்பையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு ஒன்று, கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நாய்கள் மீதான தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது.

2020 செப்டம்பருக்கு பிறகு விலங்குகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விலங்குகள் மீதான வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமை என 480 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் 226 வழக்குகள் சாலை விபத்து தொடர்பான வழக்குகள் ஆகும். எஞ்சிய வழக்குகள் பாலியல் வன்கொடுமை, அடித்துக் கொலை செய்தல் தொடர்பானவையாகும்.

இதுகுறித்து காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், விலங்குகளை அடித்தல், உதைத்தல் மற்றும் தொந்தரவு செய்து கொலை செய்தல், கடுமையான ஆயுதங்களால் தாக்குதல், கத்தியால் குத்துதல் ஆகிவற்றை ஒரு சிலர் விளையாட்டாக நினைத்து செய்வதாக கூறியுள்ளது. விலங்குகள் வன்முறை தொடர்பான பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ள மும்பை பி.எப்.ஏ (PFA) காவல்துறை தலைவர் லாடா பார்மர் ( Lata Parmar), தேசிய குற்ற ஆவணக் காப்பகமும் விலங்குகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்களை முறையாக பராமரிப்பதில்லை என கூறியுள்ளார். மேலும், விலங்குகளை இரக்க குணமற்று அணுகுதல், சட்டத்தை பற்றிய அறியாமை ஆகியவை விலங்குகள் மீதான வன்முறைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலங்குகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான 2010 - 2020 ஆம் ஆண்டு வரை 20,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு சில வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. விலங்குகள் வதையை தடுக்கும் 1960-ம் ஆண்டு சட்டத்தின் படி விலங்குள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய கால்நடை மருத்துவர் ராதா சவுத்திரி, சட்டங்கள் கடுமையாக இல்லாததே விலங்குகள் மீதான வதை அதிகரிப்பதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், விலங்குகள் வதை தொடர்பாக வழக்கு பதிவு செய்வது நீண்ட நடைமுறையாக இருப்பதாகவும், அடிப்பட்ட விலங்குகளை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு கூட அவரச ஊர்திக்கு உதவி செய்ய முன்வருபவர் பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் ராதா சவுத்திரி சிக்கல்களை எடுத்துரைத்துள்ளார்.

விலங்குகள் வதை தொடர்பாக புகார் அளித்தால் அரசு அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்துவதில்லை எனக் குற்றம்சாட்டிய சவுத்திரி, அடிப்பட்டால் விலங்கின் சிகிச்சைக்கான முழு செலவும், இறந்தால் இறுதிச் சடங்கிற்கான செலவும் உதவி செய்ய முன்வருபவர்கள் செலுத்த வேண்டியிருப்பதால், மக்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை எனத் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கூட உதவி செய்ய முன்வருபவரே அதற்கான தொகையையும் செலுத்த வேண்டி உள்ளதையும் மருத்துவர் சவுத்திரி சுட்டிக்காட்டியுள்ளார். தெரு நாய்கள் மீதான தாக்குதல்களும் வன்முறைக்கும் மேற்கூறிய நடைமுறைச் சிக்கல்களே காரணம் என்பதையும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

சட்டம் என்ன சொல்கிறது?

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11-ன் படி விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளும் கிரிமினல் குற்றம் என கூறுகிறது. இந்த சட்டத்தின்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் என இரண்டும் விதிக்கலாம். இந்திய தண்டனைச் சட்டமும் இதேபோன்ற நடைமுறையை கூறுகிறது. சட்டப்பிரிவு ஐ.பி.சி 506 -ன் படி, விலங்குகளை அச்சுறுத்துதல், தொந்தரவு செய்தல் ஆகியை குற்றம் என கூறுகிறது. ஐ.பி.சி 428,429 -ன்படி விலங்குகளை வதைக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனையாக 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமல் கூட ஒருவரை காவல்துறை கைது செய்ய முடியும்.
Published by:Ram Sankar
First published: