ஆந்திராவிலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை

விநாயகர் சிலை

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஆந்திர அரசு தடை.

 • Share this:
  கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு, பாரதிய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள், ஜனசேனா கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு ஆந்திர அரசு தடைவித்துள்ளது. இந்த நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோவில், விநாயகர் சதுர்த்திக்கு தடைவிதித்து ஆந்திர அரசு எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலில் கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி ஆகும்.

  விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பின்னர் மட்டுமே மற்ற பண்டிகைகளை கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம். ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் அவருடைய தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவுநாள் ஆகியவற்றின் போது பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கூடி நிகழ்ச்சிகளை நடத்தினர். அப்போது பரவாத கொரோனா விநாயகர் சதுர்த்தி நடத்தினால் மட்டும் பரவுமா.

  ஆளும் கட்சிக்கு சாதகமான நிகழ்ச்சிகளை நடத்தினால் கொரோனா பரவாது, ஆனால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான நிகழ்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தினால் மட்டும் கொரோனா பரவும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். விநாயகர் சதுர்த்தி தடை விதித்து அரசு எடுத்துள்ள முடிவு இவர்களுக்கு ஆலோசனை கூறுவது யார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அதில் கூறியுள்ளார்.

  இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு கட்டுப்பாடு விதத்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், இதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில் தெரிவித்தார்.

  Must Read : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு

  இதேபோல, டெல்லியிலும், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: