ஹோம் /நியூஸ் /இந்தியா /

கைதிகளின் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள்..!

கைதிகளின் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள்..!

விநாயகர் சிலை

விநாயகர் சிலை

விநாயகர் சிலைகளை கலை நயத்துடன் உருவாக்குவதில் திறமையை வாய்ந்த சாகர் பவார் என்ற சிறைக்கைதி மற்ற கைதிகளுக்கும் இந்த கலையை கற்றுக்கொடுத்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும், கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி கோலாகலம் குறைந்து காணப்படுகிறது. இதனிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை உருவாக்க கலைஞர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆக்கப்பூர்வமான வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் நாசிக் மத்திய சிறையில் உள்ள கைதிகள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறை கைதிகள் 2,000 சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக கைதிகளுக்கு சாகர் பவார் என்பவர் முறையான பயிற்சிகளை வழங்கி அவரும் பணியில் ஈடுபட்டுள்ளார். 35 வயதான சாகர் பவார், ராய்காட்டின் டவுன் பேனை சேர்ந்த ஒரு கைவினை கலைஞர் ஆவார்.

விநாயகர் சிலை

விநாயகர் சிலைகளை கலை நயத்துடன் உருவாக்குவதில் திறமையை வாய்ந்த இவர் தற்போது குற்றவாளியாக சிறையில் உள்ள நிலையில், சக கைதிகளுக்கும் இதனை கற்று கொடுத்துள்ளார். இதனையடுத்து தற்போது மகாராஷ்டிராவில் உள்ள கைதிகள் களிமண், பளிங்கு மற்றும் கண்ணாடியிழைகளை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நாசிக் மத்திய சிறை கண்காணிப்பாளர் பிரமோத் வாக், ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் சிறை கைதிகள் 600-700 சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். அனைத்து சிலைகளும் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாசிக் மத்திய சிறைச்சாலை ஜெயிலர் ராஜ்குமார் சாலி, இதுகுறித்து கூறுகையில் சுற்றுசூழலுக்கு உகந்த களிமண்ணிலிருந்து 20 வகையான விநாயகர் சிலைகளை வடிவமைக்க பவார் 16 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார், இந்த சிலைகளுக்கான விலைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் அவை சந்தை விலையை விட குறைவாக இருக்கும் மேலும் இது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதால் இதனை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

சிலைகளை உருவாக்கும் 16 குற்றவாளிகளில் 5 பேருக்கு ‘அகானி’ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சாலி தெரிவித்துள்ளார். ‘அகானி’ பயிற்சி என்பது சிலையின் கண்கள் மற்றும் முக்கிய பாகங்களில் வர்ணம் பூசுவதற்கான அதிநவீன பயிற்சியாகும். சிறைச்சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்ட சிலைகளை பவார் தயாரிப்பதாகவும், அவரது சிலைகளுக்கு அதிக தேவை உள்ளது. எனவே சிறை நிர்வாகம் விநாயகர் சிலைகள் அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்தவும், வெவ்வேறு அளவுகளில் தயார் செய்வதை ஊக்குவிக்கவும் முடிவு செய்திருப்பதாக ராஜ்குமார் சாலி தகவல் அளித்துள்ளார்.

First published:

Tags: Ganesh idols, Jail, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி