Chandrayan 2 | லேண்டரின் நிலை என்ன...? இஸ்ரோ புதிய தகவல்

news18-tamil
Updated: September 10, 2019, 10:39 AM IST
Chandrayan 2 | லேண்டரின் நிலை என்ன...? இஸ்ரோ புதிய தகவல்
இஸ்ரோ
news18-tamil
Updated: September 10, 2019, 10:39 AM IST
ஆர்பிட்டரில் இருக்கும் கேமரா மூலம் லேண்டரின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்புகளைக் கொண்டது.

கடந்த மாதம் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த இரண்டாம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.


7-ம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது.

படிப்படியாக தரையிறங்கும் கட்டளை பெங்களூரு மையத்தில் இருந்து அளிக்கப்பட்டது.அப்போது விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லேண்டர் நிலவை எட்டுவதற்கு 2.1 கி.மீ தொலைவு இருக்கையில், திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Loading...

லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் என்பதால், அதற்குள்ளாக தகவல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

”விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை லூனார் எடுத்து அனுப்பியுள்ளது. லேண்டர் நிலவில் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.





நிலவைப் பற்றிய சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்க...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...