ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியுடன் 26 நாடுகள்: சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற கேரள டீக்கடைக்காரர் காலமானார்!

மனைவியுடன் 26 நாடுகள்: சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற கேரள டீக்கடைக்காரர் காலமானார்!

கே.ஆர்.விஜயன் - மோகனா தம்பதி

கே.ஆர்.விஜயன் - மோகனா தம்பதி

கேரளாவில் டிக்கடை நடத்தி வரும் கேஆர் விஜயன் - மோகனா தம்பதி இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, ரஷ்யா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

 • 1 minute read
 • Last Updated :

  தனது மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள கேரளாவைச் சேர்ந்த டீக்கடைக்காரரான   கேஆர் விஜயன்  மாரடைப்பால் காலமானார்.

  கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன். இவரது மனைவி மோகனா. கொச்சியில் ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் டீக்கடையை 47 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வருகின்றனர்.  இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இந்த தம்பதியினர் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். எனினும் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பை கணவர் விஜயனிடம் மோகனா கூறியுள்ளார்.

  இதையடுத்து தங்களின் தினசரி வருமானத்தில் 300 ரூபாயை சேர்த்து வைக்கத் தொடங்கிய தம்பதியினர்.  2007ம் ஆண்டு முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். எகிப்து நாட்டுக்கு அவர்கள் சென்றனர். அதன்பின்னர்,   சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன்  விஜயன் - மோகனா தம்பதி கடந்த 14 ஆண்டுகளில் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

  சுற்றுலா மூலம் இந்த தம்பதி இந்தியா கடந்து சர்வதேச அளவில் புகழடைய தொடங்கினர். 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதியரின்ஆஸ்திரேலிய சுற்றுபயணத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உதவி செய்துள்ளார். கடைசியாக ரஷ்யாவுக்கு விஜயந் மோகனா தம்பதியினர் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பெரு போன்ற நாடுகளுக்கு இந்த தம்பதியினர் சென்றுள்ளனர்.

  இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

  இந்நிலையில், விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் காலமானார் . அவரது இறப்புக்கு கேரள சுற்றுலாத் துறை உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Couple, Kerala, Tourism