விஜய் சேதுபதி படங்களை கேரளாவில் தவிர்ப்போம்: நெட்டிசன்கள் கோபம்!
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வரின் முடிவு சரிதான் என்று பேசிய விஜய் சேதுபதிக்கு பலர் பாராட்டுகளையும் கண்டனங்களையும் சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி
- News18
- Last Updated: February 3, 2019, 5:16 PM IST
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முடிவு சரிதான் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறியதாவது: நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு பிரச்னைகள் வருகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதற்கான எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும்தான் சிறந்த வழி. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்த துறையில் இருந்தாலும் தவறு. #METOO மூலம் பெண்கள் கூறிய பாலியல் புகார்களால் தவறு செய்தவர்கள் பயத்தில் உள்ளனர். பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார் விஜய் சேதுபதி.
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வரின் முடிவு சரிதான் என்று பேசிய விஜய் சேதுபதிக்கு பலர் பாராட்டுகளையும் கண்டனங்களையும் சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர். சிலர் கேரளாவில் விஜய் சேதுபதியின் படங்களை தவிர்ப்போம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை பினராயி விஜயன் அரசு செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.Also watch
சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறியதாவது: நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு பிரச்னைகள் வருகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதற்கான எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.