விஜய் மல்லையா ரூ.578 கோடி இழப்பீடு தர உத்தரவு

news18
Updated: February 13, 2018, 8:55 AM IST
விஜய் மல்லையா ரூ.578 கோடி இழப்பீடு தர உத்தரவு
விஜய் மல்லையா
news18
Updated: February 13, 2018, 8:55 AM IST
சிங்கப்பூரைச் சேர்ந்த பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துக்கு ரூ.578 கோடி இழப்பீடு தரவேண்டும் என விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள  விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல்  விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே சிங்கப்பூரைச் சேர்ந்த விமானங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமான பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த தொகை செலுத்தாத வழக்கில் விஜய மல்லையாவுக்கு ரூ.578 கோடி அபராதம் விதித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு  பிஓசி நிறுவனத்திடம் 4 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு கிங்க்பிஷர் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் 3 விமானங்கள் வழஙகப்பட்டன. இந்த 3 விமானங்களுக்கான ஒப்பந்த தொகையை செலுத்தாததால் 4-வது விமானத்தை பிஓசி நிறுவனம் வழங்கவில்லை. இதையடுத்து ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை கிங்க்பிஷர் நிறுவனம் வழங்கவேண்டும் என்று லண்டனில் உள்ள பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில்  பிஓசி  நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.  

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிக்கன், சிங்கப்பூர் நிறுவனமான பிஓசி நிறுவனத்துக்கு கிங்க்பிஷர் நிறுவனம் ரூ.578 கோடி இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டார்.  மேலும் இழப்பீடு வழங்கமுடியாது என்று கிங்க்பிஷர் நிறுவனம் கூறமுடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...