முகப்பு /செய்தி /இந்தியா / நாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு!

நாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு!

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

2018 டிசம்பரில் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தொழிலதிபர் விஜய் மல்லையா தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவிற்கு எதிராக, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அவரை இந்தியா கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

2018 டிசம்பரில் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்த நிலையில், மல்லையா இறுதி முயற்சியாக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மே 14-ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு அவகாசம் உள்ளதாக மத்திய அரசு சார்பில் வாதடும் பிரிட்டன் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: Vijay Mallya