”தப்பி ஓடியவன் என சொல்லாதீர்கள்”- உச்ச நீதிமன்றத்தை நாடும் மல்லையா

’தப்பி ஓடியவன்’ என்ற அடைமொழியை தன் பெயரிலிருந்து நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் விஜய் மல்லையா.

Web Desk | news18
Updated: December 7, 2018, 10:49 AM IST
”தப்பி ஓடியவன் என சொல்லாதீர்கள்”- உச்ச நீதிமன்றத்தை நாடும் மல்லையா
விஜய் மல்லையா
Web Desk | news18
Updated: December 7, 2018, 10:49 AM IST
“என்னை தப்பி ஓடியவன் எனக் குறிப்பிட வேண்டாம்” என உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் விஜய் மல்லையா.

கடந்த 2016-ம் ஆண்டு இந்திய வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் தொடர்ப்பட்ட வழக்கில் மல்லையாவை நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கின் மீது வருகிற டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் முழுக்கடனையும் தான் திரும்பச் செலுத்திவிடுவதாகவும், அதை இந்திய வங்கிகளும் இந்திய அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மல்லையா திடீரென சரண்டர் ஆனார்.

நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்கவே மல்லையா கடனைத் திரும்ப அளிக்க முன்வந்ததுள்ளார் என எழுந்த விமர்சனங்களை மல்லையா மறுத்துவிட்டார். தற்போது, மீண்டும் ஒரு வேண்டுகோளுடன் வந்துள்ளார் மல்லையா.

“தப்பி ஓடியவன்” என அமலாக்கத்துறையால் குறிப்பிடப்பட்டு தன் பெயர் உடன் இந்த அடைமொழி ஒட்டிக்கொண்டிருப்பதை நீக்க உச்ச நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: வீட்டுக்குள் புகுந்த 19 அடி நீள ராஜநாகம்
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்