நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?- மேல்முறையீட்டுக்கு அனுமதி கிடைக்குமா?

விஜய் மல்லையா

விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய எதிர்ப்பு வந்தால் தீர்ப்பு வந்த 28 நாட்களுக்குள் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முயற்சியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றத்தில் இன்று அனுமதி கோரியுள்ளார் மல்லையா.

9ஆயிரம் கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான ஒப்புதலில் ஐக்கிய நாடுகளின் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், தன்னை நாடு கடத்தக்கூடாது என்பதற்காக மேல்முறையீடு வழக்கு தொடர லண்டன் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைக்க வந்திருந்தார் விஜய் மல்லையா.

இதுதொடர்பான தீர்ப்பு இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளது. வழக்கு விசாரணையில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய எதிர்ப்பு வந்தால் தீர்ப்பு வந்த 28 நாட்களுக்குள் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால், மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டால் வழக்கு தொடர்ந்து நடக்கும். இறுதி முடிவை லண்டன் உயர் நீதிமன்றமே எடுக்கும்.

மேலும் பார்க்க: நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கம் - அமலாக்கத்துறை
Published by:Rahini M
First published: