பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பிசென்றுள்ள விஜய் மல்லையாவின் டிவிட்டர் பதிவுகளை வைத்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் 9ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். லண்டனுக்கு சென்ற அவர் மீது CBI மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் அவரை இங்கிலாந்தில் இருந்து விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வரை இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் லண்டனில் வாசித்து வரும் விஜய் மல்லையா இந்தியாவில் நடக்கும் பண்டிகை தினங்களில் தனது டிவிட்டர் பக்கத்தில் தவறாமல் ட்வீட் செய்து வருகிறார். வங்கிகள் விடுமுறை தினங்களில் மட்டும் அவர் டிவிட்டரில் ட்வீட் செய்து வருவதாக நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய் பாசத்தில் ராகுலை மிஞ்ச ஆளே இல்லை - காங்கிரஸ் யாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
அவரது டிவிட்டர் பக்கத்தில் சென்று பார்த்தால் மகா நவாமி, ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட வங்கிகள் விடுமுறை அளித்திருக்கும் தினங்களில் மட்டும் விஜய் மல்லையா ட்விட் செய்து வருவதாக அவரது பதிவில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank holiday, Twitter, Vijay Mallya