கீழே விழுந்த போட்டோகிராபர்... ஓடிச்சென்று தூக்கிவிடும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி உதவி செய்யும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கீழே விழுந்த போட்டோகிராபர்... ஓடிச்சென்று தூக்கிவிடும் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: January 25, 2019, 5:09 PM IST
  • Share this:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் திடீரென கீழே விழ, பதைபதைத்த ராகுல் ஓடிச்சென்று விழுந்தவரைத் தூக்கிவிடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரில் நடக்கும் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரைக் காண கட்சித் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் எனப் பலர் காத்திருந்தனர்.
ராகுல் காந்தி வந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியை புகைப்படம் எடுக்க முயற்சித்த புகைப்படக் கலைஞர் ஒருவர் திடீரென கால் இடறி இரண்டு படிகள் கீழே உருண்டு தலைகுப்புற விழுந்தார்.புகைப்படக் கலைஞர் விழுவதை அதிர்ச்சியுடன் சுற்றியிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் நிதானத்துக்கு வரும் முன்னர் பதைபதைத்த ராகுல் காந்தி விரைவாக ஓடி வந்து கீழே விழுந்தவரை தூக்கிவிட்டு உதவினார்.

ராகுல் காந்தி உதவி செய்யும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பார்க்க: குக்கர் சின்னம்... அனுதாபம் தேடுகிறாரா தினகரன்?
First published: January 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்