Home /News /national /

போலீஸிடம் துப்பாக்கியை கட்டி மிரட்டி தப்பிய வட மாநில திருடர்கள்.. அதிர்ச்சி வீடியோ

போலீஸிடம் துப்பாக்கியை கட்டி மிரட்டி தப்பிய வட மாநில திருடர்கள்.. அதிர்ச்சி வீடியோ

சிசிடிவியில் பதிவான காட்சி

சிசிடிவியில் பதிவான காட்சி

வஞ்சியூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது போலீசாரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்றுள்ளனர். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுபுகுந்து திருட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மற்றும் போலீசாரை துப்பாக்கியை காட்டி தப்பித்த குற்றவாளிகள் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த இடப்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் சிந்து. ஆசிரியையாக வேலை செய்யும் இவர் நேற்று காலை தனது காரில் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். கார் டிரைவர் சிந்துவை பள்ளியில் இறக்கி விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கேட்டுகள் திறந்து கிடந்துள்ளன. உள்ளே சென்று பார்த்தபோது வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் நின்றுள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது இந்தி மொழியில் பேசி கொண்டு வெளியேறி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வஞ்சியூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது போலீசாரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்றுள்ளனர்.

இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து திருடர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Published by:Raj Kumar
First published:

Tags: Kerala, Kerala police, Theives

அடுத்த செய்தி