முகப்பு /செய்தி /இந்தியா / சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல் - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல் - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

சிறைக்குள் அமைச்சருக்கு  மசாஜ்

சிறைக்குள் அமைச்சருக்கு மசாஜ்

ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் தரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஹவாலா பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு சட்டத்திற்கு புறம்பாக விஐபி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த புகாரை அமலாக்கத்துறை கூறி வந்த நிலையில், கடந்த வாரம் திகார் சிறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் தரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. இதை பாஜக வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சத்தியேந்திரா ஜெயின் சிறைக்குள் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு கால், முதுகு, தலை ஆகிய பகுதிகளுக்கு சில நபர்கள் மசாஜ் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இவை செப்டம்பர் மாதம் நடைபெற்றதாக சிசிடிவி வீடியோவில் தெரியவந்துள்ளது.

திகார் சிறை டெல்லி அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறது. எனவே, ஆம் ஆத்மி அரசு தனது அமைச்சருக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து விஐபி வசதிகளை செய்து வைத்துள்ளதாக பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியோ இந்த புகரை மறுத்துள்ளது.

இதையும் படிங்க: அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

top videos

    மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா இது குறித்து கூறுகையில், "சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிராக பாஜக 5 மாதங்களாகவே சதித்திட்டம் தீட்டி வருகிறது. மருத்துவரின் அறிவுரையின் பேரில் தான் அமைச்சருக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.  பிரதமருக்கு உடல் நிலை கோளாறு என்றாலும் சிகிச்சை பெறத்தான் செய்வார். இயல்பான ஒன்றை பாஜக அரசியல் செய்கிறது" என்று பதில் தெரிவித்துள்ளார். அதேவேளை, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

    First published:

    Tags: Aam Aadmi Party, BJP, CCTV, CCTV Footage, Tihar, Viral Video