காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும் அவரின் சகோதரி பிரியங்காவும் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் ஸ்னோ பைக்கில் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி 164 நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
அங்குள்ள குல்மார்க் பகுதிக்கு சென்ற அவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் மக்களின் உரிமையை மத்திய பாஜக பறித்து விட்டதாகவும், மக்களின் ஜனநாயக உரிமையை காக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார். இந்த பயணத்தில் ராகுலுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும் குல்மார்க் சென்றுள்ளார்.
RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52
— Srinivas BV (@srinivasiyc) February 19, 2023
இந்நிலையில், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் குல்மார்க் பனிமலையில் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ராகுல் காந்தியும்,பிரியங்கா காந்தியும் பனி சறுக்கு வாகனமா ஸ்னோ பைக்கை மாறி மாறி ஓட்டி விளையாடினார். இந்த வீடியோ வேகமாக பரவிவரும் நிலையில்,லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Priyanka gandhi, Rahul gandhi, Viral Video