Home /News /national /

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு வீடியோ: ஜிந்தாபாத் கோஷங்களுடன் பிரதமரை நெருங்கி நிற்கும் பாஜகவினர்!

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு வீடியோ: ஜிந்தாபாத் கோஷங்களுடன் பிரதமரை நெருங்கி நிற்கும் பாஜகவினர்!

பஞ்சாப் நெடுஞ்சாலையில் பிரதமர் மேம்பாலத்தில் காத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் பாஜகவினர் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் நெடுஞ்சாலையில் பிரதமர் மேம்பாலத்தில் காத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் பாஜகவினர் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் நெடுஞ்சாலையில் பிரதமர் மேம்பாலத்தில் காத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் பாஜகவினர் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, 20 நிமிடங்கள் காத்திருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மேம்பாலத்தில் காத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் பாஜகவினர் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு விமானம் மூலம் நேற்று சென்றார். பின்னர் அங்கிருந்து ஹூசைனிவாலாவில் உள்ள தேசியத் தியாகிகள் நினைவிடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செவல்வதாக இருந்தது. ஆனால் பதிண்டாவில் நேற்று மழை பெய்தது. இதனால் மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் இயக்குவதை தவிர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் ஹூசைனிவாலாவுக்கு சாலை மார்க்கமாக செல்ல கடைசி நேரத்தில் திட்டமிட்டு அதை செயல்படுத்தினர்.

    Also read:  தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு

    ஹூசைனிவாலாவில் இருந்து 30 கிலோமீட்டருக்கு முன்னதாக பிரதமர் சென்ற பாதையில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமரின் கார் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவரின் நிகழ்ச்சி ரத்தானது. இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    உயிரோடு திரும்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்படி விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்பு குறைப்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சம் சார்பிலும், பஞ்சாப் மாநிலம் சார்பிலும் தனித்தனியாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் நெடுஞ்சாலையில் பிரதமர் மேம்பாலத்தில் காத்திருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் பாஜகவினர் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.



    இதுதொடர்பாக வெளிவந்துள்ள அந்த வீடியோவில், பாஜக தொண்டர்கள் ஒரு குழுவாக பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிற்பது தெரிகிறது. நெடுஞ்சாலையின் மறுபுறம் கருப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் அருகே ஆபத்தான முறையில் நின்று கொண்டு, பாஜக கொடியை ஏந்தியபடி, “பாஜக ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பியபடி அந்தக் குழு நிற்கிறது.

    பின்னர் பிரதமரின் கார் நகர்கிறது, உயரடுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) அதிகாரிகள் ஒரு பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குகிறார்கள். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

    பிரதமர் மோடி பெரோஸ்பூரில் பேரணிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவரது கான்வாய் மேம்பாலத்தின் நடுவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மத்தியில் சிக்கியது. அப்போது, அதே பேரணிக்கு சென்ற பாஜக தொண்டர்களும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சிக்கிக் கொண்டனர். பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் இருப்பதை உணர்ந்த அவர்கள், அவரது காரை நெருங்க முயன்றுள்ளனர். அன்றைய பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடுக்கு இது மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.

    Also read:  பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி