ஹோம் /நியூஸ் /இந்தியா /

இங்கிலிஷ் கோச்சிங்.. 42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20 வயது மாணவி..!

இங்கிலிஷ் கோச்சிங்.. 42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20 வயது மாணவி..!

சங்கீத் குமார் - சுவேதா குமாரி

சங்கீத் குமார் - சுவேதா குமாரி

பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில ஆசிரியர் தன் மாணவியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

பீகாரில் ஆசிரியர் ஒருவர் மாணவியை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிக்க :  குடும்ப கவுரவத்தை விட குழந்தைகள் நலன்தான் பெரியது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

சிறிது நாட்களுக்கு முன்னர் சுவேதா குமாரி (20) என்ற மாணவி, ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல மாணவி சுவேதா மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலில் விழுந்தனர்.

இதன்பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்வதென்று முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆசிரியராக இருந்த ஒருவர், தான் நடத்திய பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியை திருமணம் செய்துகொண்ட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

First published:

Tags: Bihar, Marriage, Old man Married young Girl, Student, Teacher