ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH - வணங்க சென்ற பாஜக எம்பி.. எட்டி உதைத்த பசு.. கோமாதா பூஜையில் பரபரப்பு

WATCH - வணங்க சென்ற பாஜக எம்பி.. எட்டி உதைத்த பசு.. கோமாதா பூஜையில் பரபரப்பு

பாஜக எம்பி நரசிம்ம நாவ்-வை உதைத்த பசு

பாஜக எம்பி நரசிம்ம நாவ்-வை உதைத்த பசு

கோமாதா பூஜை நடத்த வேண்டும் என்று அவர் கூறியதால் மார்க்கெட்டில் இருந்த பசு ஒன்றை தொழுவத்தில் கட்டி பூஜை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திராவில் பசுவை வணங்க சென்ற பாஜக எம்பியை பசு எட்டி உதைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பலர் பசுவை கோமாதா என வழிப்படுவது தங்களது பண்பாடு என பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருகிறார்கள்.

இதையும் படிக்க :  இங்கிலிஷ் கோச்சிங்.. 42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20 வயது மாணவி..!

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் சில்லி மார்க்கெட்டில் திறப்பு விழா ஒன்றிற்காக பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்மா ராவ் சென்றுள்ளார். அவர் சென்ற போது திறப்பு விழாவிற்கு முன் கோமாதா பூஜை நடத்த வேண்டும் என்று அவர் கூறியதால் மார்க்கெட்டில் இருந்த பசு ஒன்றை தொழுவத்தில் கட்டி பூஜை செய்துள்ளனர். பசுவிற்கு சந்தனம், மஞ்சள் பூசி மாலை அணிவித்து பொட்டு வைத்து சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர்.

அப்போது எம்பி நரசிம்ம ராவ் அந்த பசுவை வணங்க சென்றபோது அந்த பசு அவரை உதைத்துள்ளது. சுதாகரித்து கொண்ட அவர், உடனே பின் வந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

First published:

Tags: Andhra Pradesh, BJP MP, Cow