இரண்டரை லட்சம் செலவு செய்து பூண்டு பயிரிட்ட மத்தியப் பிரதேச விவசாயி ஒருவர் அதற்கான உரிய விலை கிடைக்காத விரக்தியில் சந்தையிலேயே பயிரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
பசுபதிநாதர் கோயில் அமைந்துள்ள இடம் மாண்ட்ஸர். பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இங்கு விவசாய விளைபொருட்கள் சந்தை உள்ளது. தனது நிலத்தில் விளைந்த பூண்டை நல்ல விலைக்கு விற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் எண்ணத்துடன் சந்தைக்கு சென்ற விவசாயி சங்கர் சிர்பிரா.
பூண்டு பயிரின் தரத்துக்கு ஏற்றவாறு விலை குவிண்டாலுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தனது இஞ்சிக்கு குவிண்டாலுக்கு ரூ.5,000 வரை கிடைக்கும் என்ற ஆசையுடன் சந்தைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அவரது இஞ்சி குவிண்டாலுக்கு ரூ.1,100க்கும் மேல் போகவில்லை.
இதில் கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான சங்கர் சிர்பிரா. தான் கொண்டு வந்த 160 கிலோ பூண்டை சந்தையிலேயே அனைவர் முன்னிலையிலும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்தும், விவசாயிகள் போராட்டமும் முடிவுக்கு வந்ததையடுத்தும் நடந்த இந்தச் சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பூண்டைப் போட்டு கொளுத்திய வைரல் வீடியோ இதோ:
இது தொடர்பாக அந்த விவசாயி கூறியதாவது: இந்த இஞ்சியை விளைக்க நான் இதுவரை இரண்டரை லட்சம் செலவு செய்துள்ளேன். பாதி விலைக்குக் கூட போகவில்லை. எத்தனையாண்டுகள் இந்த நஷ்டங்களைத் தாங்குவது? ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயிக்காததால் இந்த நஷ்டம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இந்தக் கோபத்தை எப்படி தீர்த்துக் கொள்வது, நெருப்பு வைத்து கொளுத்தி கோபத்தை தீர்த்துக் கொண்டேன். பயிர் எரியும் போது சில விவசாயிகள் அருகில் நின்று ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று கோஷமிட்டனர். இதனையடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Also Read: 80 நாய்க்குட்டிகளை கொன்ற 2 கொலைகார குரங்குகள் சிறைபிடிப்பு... கேங் வார் என விசாரணையில் தகவல்
பூண்டை எரித்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவசாயி பிறகு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். விளைபொருட்களை விவசாயிகள் எரிப்பது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் மாதத்தில் நாசிக் விவசாயி ஒருவர் தக்காளி விலை கடும் சரிவடைந்தவுடன் தன் தக்காளியை போட்டு எரித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.