• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் - வீடியோ!

சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் - வீடியோ!

samosa - congress

samosa - congress

கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாக்களை வாங்கிக் கொண்டு காவல்நிலையத்துக்கு சென்றார் பிரயாக்ராஜ் காங்கிரஸ் செயலாளர் இர்ஷத் உல்லா.

  • Share this:
ஒரு சமோசா காங்கிரஸ் தலைவர்களிடையே அடிதடி மோதலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்றாலும் இது தான் உண்மையில் நடந்திருக்கிறது.

பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை உணவு கலாச்சார ரீதியில் பிணைப்பு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தென் இந்தியாவில் மாலை நேர உணவாக கருதப்படும் சமோசா வட இந்தியாவில் முக்கிய உணவுப் பண்டமாக கருதப்படுகிறது. சமோசா இல்லையென்றால் சண்டையே வரும் என நகைச்சுவைக்காக ஒரு சொல் உண்டு, ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இது உண்மையாகவே நடந்து விட்டது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் (பிரயாக்ராஜில் (முன்னர் அலகாபாத்) கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது மற்றும் லக்கிம்பூர்கேரி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூராக இருந்த காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். இதனிடையே கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாக்களை வாங்கிக் கொண்டு காவல்நிலையத்துக்கு சென்றார் பிரயாக்ராஜ் காங்கிரஸ் செயலாளர் இர்ஷத் உல்லா.

Also read: ’போலீஸ்’ நண்பருடன் கள்ளக்காதல்… வாழ்க்கையை தொலைத்த இளம்பெண்

இர்ஷத் அங்குள்ளவர்களுக்கு சமோசாக்களை விநியோகம் செய்துகொண்டிருந்த போது மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஹசீப் அகமது என்ற தலைவர் மூன்று சமோசாக்களை எடுத்திருக்கிறார். இதனால் கோவமடைந்த இர்ஷத் உல்லா ஆத்திரத்தில் ஏதோ பேச, அவருக்கும் ஹசீப் அகமதுவுக்கும் இடையே பெரிய வாய்ச்சண்டையாக உருவெடுத்தது. இருவரும் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.

Also read:  ட்ரிங்ஸ், நான் வெஜ் சாப்ட்ருக்கேன்னு ஞாயிறு தடுப்பூசி போடாமல் எஸ்கேப் ஆவோருக்கு சனிக்கிழமை முகாம்…

இருவருக்குமிடையேயான சண்டையை பொதுச்செயலாளர் நஃபிஸ் அன்வர் தடுத்து சமரசம் செய்ய முயற்சித்தார், மேலும் நீங்கள் ஒன்றும் வீட்டில் இல்லை பொதுஇடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார். இருப்பினும் அவரின் சொல்லுக்கு அடங்காத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், போலீசார் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை, உத்தரப்பிரதேச மாநில அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: