பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்றவருக்கு நேர்ந்த சோகம் - வீடியோ!

பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன்

பாம்புகளே தனக்கு சகோதர்கள் என்று எடுத்துரைக்கும் வகையில் தன்னார்வலரான மன்மோகன், சாப்ரா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் இரு பாம்புகளுக்கு தனது சகோதரியை ராக்கி கயிறு கட்ட வைக்க முயன்றுள்ளார்.

  • Share this:
தன்னார்வமாக பாம்பு பிடிப்பதில் ஈடுபட்ட வந்த சீக்கிய இளைஞர் ஒருவர் பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்று பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதாகும் மன்மோகன் எனும் இளைஞர். இவர் தன்னார்வலராக கட்டணம் இல்லாமல் பாம்பு பிடிப்பது, அடிபட்ட பாம்புகளுக்கு சிகிச்சையில் உதவுவது, பாம்பு கடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாம்பு விஷத்தை எடுத்து தருவது போன்ற பணிகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார்.

Also Read:  உலகின் வேகமான ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்களுக்கு எலும்புகள் முறிந்ததால் அதிர்ச்சி!

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதரத்துவத்தின் அடையாளமாக கொடாடப்படும் ரக்‌ஷா பந்தன் அன்று சகோதரர்களுக்கு சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்து பரிசுகளை பெறுவார்கள். பாம்புகளே தனக்கு சகோதர்கள் என்று எடுத்துரைக்கும் வகையில் தன்னார்வலரான மன்மோகன், சாப்ரா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் இரு பாம்புகளுக்கு தனது சகோதரியை ராக்கி கயிறு கட்ட வைக்க முயன்றுள்ளார்.அப்போது அருகாமையில் வசிப்போர் கூடி இருந்து இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் சிலர் இதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மன்மோகன் கையில் இருந்த ஒரு பாம்பு சுற்றி வளைத்து மன்மோகனின் காலில் எதிர்பாராத வகையில் கடித்து விட்டது.

விஷப் பாம்பு கடித்ததில் சிறிது நேரத்தில் மன்மோகன் மரணமடைந்தார். மன்மோகனின் மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன்மோகன் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார். பாம்பின் மீதும் இயற்கையின் மீது பற்று கொண்டிருந்ததால் பாம்புகள் பிடிப்பதை சேவையாக செய்து வந்தார். அவரின் திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Arun
First published: