ஹோம் /நியூஸ் /இந்தியா /

காந்தி சிலையில் அழுக்கு.. கைக்குட்டையால் சுத்தம் செய்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி - வீடியோ

காந்தி சிலையில் அழுக்கு.. கைக்குட்டையால் சுத்தம் செய்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி - வீடியோ

அண்ணல் காந்தியின் சிலையை சுத்தம் செய்த தேஜஸ்வி யாதவ்

அண்ணல் காந்தியின் சிலையை சுத்தம் செய்த தேஜஸ்வி யாதவ்

அண்ணல் காந்தியின் சிலையை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaLondonLondon

  அண்ணல் காந்தியின் 153ஆவது பிறந்தநாள் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் என பல்வேறு தலைவர்கள் தங்கள் புகழ் அஞ்சலியை தெரிவித்துவருகின்றனர்.

  இந்நிலையில், பிகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பிரிட்டன் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று சென்ற அவர் அங்குள்ள அண்ணல் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த சென்றுள்ளார். அப்போது அந்த சிலையில் தூசி மற்றும் எச்சங்களுடன் அழுக்கு இருந்துள்ளது. இதை பார்த்த தேஜஸ்வி யாதவ் வெறுமனே மரியாதை செய்து விட்டு செல்லவில்லை. சற்றும் தாமதிக்காமல் தனது கைக்குட்டையை எடுத்து சிலையில் இருந்த அசுத்தங்களை அகற்றி தூய்மை செய்துள்ளார்.

  இந்த வீடியோவை பீகார் மாநில எம்எல்ஏ ரிஷி குமார் ட்விட்டரில் பதிவிட்டு, "துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தாமாக முன்வந்து இவ்வாறு சிலையை துடைத்து சுத்தம் செய்தது அண்ணல் காந்தி மீதும் அவர் கொள்கை மீதும் உள்ள பற்றை காட்டுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

  தேஜஸ்வி யாதவ்வின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், சிலர் இதை பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் விமர்சித்து வருகின்றனர். லண்டனில் உள்ள இந்த சிலையை 2015ஆம் ஆண்டு அன்றைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி திறந்து வைத்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bihar, London, Viral Video