• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..

அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..

மண்ணை எறிந்த பெண் அதிகாரி

மண்ணை எறிந்த பெண் அதிகாரி

அதிகாரிகள் மீட்டிங்கில் இருந்த போது அவர்களின் முன்னிலையில், சீனியர் அதிகாரியின் முகத்தில் பெண் அதிகாரி ஒருவர் மண்ணை அள்ளி வீசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • Share this:
அலுவல் ரீதியில் துன்புறுத்தியதால் விரக்தியடைந்த பெண் அரசு அதிகாரி ஒருவர், அவருடைய உயர் அதிகாரியின் முகத்தில் மண்ணை வாரி தூற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டிணத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரான புஷ்பவர்தன், தனது அலுவலகத்தில் அதிகாரிகள் சிலருடன் மீட்டிங்கில் இருந்துள்ளார், அப்போது அங்கு வந்த பெண் துணை ஆணையர் சாந்தி என்பவர், இணை ஆணையர் புஷ்பவர்தனின் முகத்தில் கையில் கொண்டுவந்திருந்த மண்ணை அள்ளி வீசி தனது ஆத்திரத்தை தீர்த்திருக்கிறார்.

Also Read: திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்

அதிகாரிகள் மீட்டிங்கில் இருந்த போது அவர்களின் முன்னிலையில், சீனியர் அதிகாரியின் முகத்தில் பெண் அதிகாரி ஒருவர் மண்ணை அள்ளி வீசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் அதிகாரியின் இந்த செயலால் அதிர்ந்து போன அதிகாரிகள் எழுந்து நின்று அவரிடம் சமாதனமாக பேசுகின்றனர், ஆனால் உயர் அதிகாரியான புஷ்பவர்தன், கூலாக தனது சீட்டில் அமர்ந்தவாரே இருந்ததை பார்க்க முடிகிறது. இது தொடர்பான அலுவலக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.



Video from The News Minute

சீனியரான புஷ்பவர்தன், கடந்த ஒரு மாதமாக தன்னை மன ரீதியாக குடைச்சல் கொடுத்து துன்புறுத்தி வந்ததாகவும் அதன் காரணமாக விரக்தியில் இப்படி செய்ததாகவும் பெண் அதிகாரியான சாந்தி கூறியிருக்கிறார்.

புஷ்பவர்தன் கடந்த இரண்டு மாதங்க்ளுக்கு முன்னர் தான் அந்த அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்திருக்கிறார். புஷ்பவர்தன், சாந்தியை தனிப்பட்ட ரீதியில் கார்னர் செய்ததாகவும், பணி ரீதியிலான குடைச்சல்களையும், மன ரீதியான அழுத்தங்களையும் கொடுத்ததாக சாந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு தெரியாமலே தனது கீழ்நிலை அதிகாரிகளை புஷ்பவர்தன் சஸ்பெண்ட் செய்ததாகவும் அவர் கூறினார். சமீபத்தில் நிதி முறைகேடு தொடர்பாக கோவில் செயல் அலுவலர் ஒருவரை அவர் சஸ்பெண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலி.. மருத்துவர் சொன்ன காரணம்!

இதனிடையே புஷ்பவர்தன் குறித்து ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் மண்ட இணை ஆணையர் இருவரையும் விசாரணைக்கு அழைத்த நிலையில் புஷ்பவர்தன் மட்டும் ஆஜராகாமல் இருந்ததாகவும் சாந்தி கூறினார். மேலும் தனக்கு மன ரீதியில் குடைச்சல் கொடுத்ததாக புஷ்பவர்தன் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதாகவும் சாந்தி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சீனியரான புஷ்பவர்தன் கூறுகையில், திடீரென சாந்தி எனது அலுவலகத்திற்குள் வந்து அதிகாரிகள் முன்னிலையில் என் மீது மணலை வாரி இறைத்தார், தவறான வார்த்தைகளாலும் பேசினார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு ஆணையரிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: