Home /News /national /

குடியரசு தின அணிவகுப்பில் களமிறங்கும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படை!

குடியரசு தின அணிவகுப்பில் களமிறங்கும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படை!

குடியரசு தின அணிவகுப்பு (file)

குடியரசு தின அணிவகுப்பு (file)

Republic Day | நாட்டின் 70-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
    டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 4 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாட்டின் 70-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் ஆகியோர் நிகழ்ச்சியில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, ராணுவ அணிவகுப்புகளை பார்வையிடுவார்கள்.

    நேதாஜியும் இந்திய தேசிய ராணுவமும்!

    மாநிலங்களின் சிறப்புகளை போற்றும் விதமான அலங்கார ஊர்திகள், முப்படை தளவாடங்களின் அணிவகுப்பு, முப்படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தப்படும். இந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு அணிவகுப்பில் புதிதாக ஒரு படை இணைய உள்ளது.

    இரண்டாம் உலகப்போரின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய வீரர்களில் 4 பேர் இம்முறை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

    97 - 100 வயதான நால்வர் டெல்லியில் வசித்து வரும் நிலையில், அவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.



    சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்றை மோடி திறந்து வைத்திருந்தார். அப்போது, நேதாஜிக்கு தொப்பி வழங்கிய குடும்பத்தை நேரில் அழைத்து மோடி கவுரவித்தார்.

    Also See...

    Published by:Sankar
    First published:

    Tags: Republic day

    அடுத்த செய்தி