சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயர் பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

ஜெய்பால் ரெட்டி அமைச்சராக இருக்கும் போதே பிரசார் பாரதி, தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: July 28, 2019, 12:32 PM IST
சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயர் பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!
ஜெய்பால் ரெட்டி
news18
Updated: July 28, 2019, 12:32 PM IST
சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயர் பெற்ற காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி.  கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  அவருக்கு மனைவியும், இரட்டையர்களான மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார்.  இதன்பின் அரசியலில் நுழைந்து 1970ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வானார்.

பின்னர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். ஆங்கிலத்தில் மிக புலமைவாய்ந்த ஜெய்பால் ரெட்டி, சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயரையும் பெற்றவர்.

ஜெய்பால் ரெட்டி அமைச்சராக இருக்கும் போதே பிரசார் பாரதி, தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...