• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 94வது பிறந்தநாளை பிரதமர் மோடியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அத்வானி!

94வது பிறந்தநாளை பிரதமர் மோடியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அத்வானி!

94வது பிறந்தநாளை பிரதமர் மோடியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அத்வானி!

94வது பிறந்தநாளை பிரதமர் மோடியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அத்வானி!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது 94வது பிறந்தநாளை பிரதமர் மோடியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

  • Share this:
    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த பிரதமரை, அத்வானி வாசலுக்கு வந்து வரவேற்றார். அப்போது, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர், அத்வானியை கைதாங்கலாக வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் உடனிருந்தனர்.



    தொடர்ந்து, அத்வானி கேக் வெட்டி தனது 94வது பிறந்தநாளை கொண்டாடினார். பாஜகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: