பொருளாதார தேக்க நிலை கவலை அளிக்கிறது: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்!

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணிக்க புது முறையை கையாள வேண்டும் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையும் மிகவும் வேறுபட்டது என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பொருளாதார தேக்க நிலை கவலை அளிக்கிறது: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்!
ரகுராம் ராஜன்
  • News18
  • Last Updated: August 20, 2019, 12:28 PM IST
  • Share this:
இந்திய பொருளாதாரத்தில் நிலவி வரும் தேக்க நிலை மிகவும் கவலை அளிக்கிறது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல துறைகளின் உற்பத்தி குறைந்து வருவதால் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தனியார் முதலீடுகளும் இந்தியாவில் குறைந்துள்ளது. அத்துடன் மத்திய அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், பொருளாதார மந்தநிலை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன என்றும் இந்த கணிப்பு மத்திய அரசின் கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையை போக்க முக்கியமான சீர்த்திருத்தம் அவசியம் எனக்கூறியுள்ள ரகுராம் ராஜன், அதன் மூலம் தனியார் முதலீட்டை அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த நாட்களுக்குள் சலுகைகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை மிகைப்படுத்தி காட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனால், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணிக்க புது முறையை கையாள வேண்டும் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையும் மிகவும் வேறுபட்டது என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.Also see...

First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading