சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க வாய்ப்பு!

இதில் 68-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். குண்டு வெடிப்பு நடந்த இரண்டு நாட்களில் சிறப்பு விசாரனை குழு அமைக்கப்பட்டது.

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க வாய்ப்பு!
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
  • News18
  • Last Updated: March 11, 2019, 3:55 PM IST
  • Share this:
2007-ம் ஆண்டு நடைபெற்ற சம்ஜ்வ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 68-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அதில் பலர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஹரியானாவின் பானிப்பட் மாவட்டத்தில் தீவானா ரயில் நிலையத்திலிருந்து அட்டாரி செல்லும் போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.


குண்டு வெடிப்பு நடந்த இரண்டு நாட்களில் சிறப்பு விசாரனை குழு அமைக்கப்பட்டது. பின்னர் 2010-ம் ஆண்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணை தொடக்கத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் சிமி இயக்கம் இருக்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால், இதில் இந்து அமைப்பினர் சம்மந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய புலனாய்வு அமைப்பு சுவாமி அசீமானந்தா, சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்ரா, ராஜீந்தர் சவுத்ரி மற்றும் கமல் சௌஹான் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இந்த குண்டு வெடிப்புக்குத் திட்டம் தீட்டிக்கொடுத்த சுனில் ஜோஷி 2017-ம் ஆண்டு இறந்துவிட்டார். ராம்சந்திர கல்சங்ரா மற்றும் சந்தீப் டாங்கே இருவரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மே மாதம் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்கா என மூன்று கோர சம்பவங்கள் நடந்தேறியது.

இதில் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுவாமி அசீமானந்தாக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் ஜாமில் வெளிவந்தது வேறு கதை.

தேசிய புலனாய்வு அமைப்பு சுவாமி அசீமானந்தாவை விசாரணை செய்து ஒப்புதல் வாக்குமூலமும் பெற்றுள்ளது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தான் காங்கிரஸ் கட்சி இஸ்லாமில் மட்டும் தீவிரவாதிகள் உள்ளார்களா? இந்துக்களில் தீவிரவாதிகள் இல்லையா என்று கூறியது மிகப் பெரிய விவாதப் பொருளானது.

இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் கமல் சவுகான், ராஜேந்திர சவுதிரி, லோகேஷ் ஷர்மா மற்றும் ஜாமின் பெற்று வெளிவந்துள்ள அசீமானந்தா உள்ளிட்டவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் பார்க்க:
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading