துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு
வெங்கைய நாயுடு
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 10:58 PM IST
  • Share this:
இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா இன்றுவரை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் கொரோனா பாதிக்கப்பட்டனர். அதனைக் கடந்து மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். உச்சபட்சமாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழதந்தார்.  தமிழகத்திலும், எம்.பி வசந்தகுமார், எம்.எல்.ஏ அன்பழகன் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில், 61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்த துணைக் குடியரசுத் தலைவர் ட்விட்டர் பதிவில், ‘இன்று காலையில் துணைக்குடியரசுத் தலைவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவரை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளளது.அவருடைய மனைவி உஷா நாயுடு கொரோனா பாதிப்பு இல்லை. அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading