பெல்ஜியத்தில் உள்ள சரவண பவனில் தோசையை ருசித்த வெங்கையா நாயுடு

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சரவண பவன் பெல்ஜியம் கிளையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தோசையை ருசித்துள்ளார்.

பெல்ஜியத்தில் உள்ள சரவண பவனில் தோசையை ருசித்த வெங்கையா நாயுடு
பெல்ஜியம் சரவண பவனில் வெங்கையா நாயுடு
  • News18
  • Last Updated: October 22, 2018, 3:54 PM IST
  • Share this:
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சரவண பவன் பெல்ஜியம் கிளையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தோசையை ருசித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரெசில்ஸில் 12-வது ஆசிய - ஐரோப்பிய மாநாடு கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மாநாடு நிறைவு பெற்ற பின்னர், ப்ரெசில்ஸ் நகரில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு சென்ற அவர், அங்கு தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அவருடன், இந்திய உயர் அதிகாரிகள், அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஆகியோரும் சாப்பிட்டுள்ளனர். “ப்ரெசெல்ஸில் உள்ள இந்திய உணவகமான சரவண பவனில் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தேன்” என குடியரசு துணைத்தலைவர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது.
சாப்பிட்ட பின்னர் அங்குள்ள ஹோட்டல் பணியாளர்களிடம் உரையாடிய வெங்கையா நாயுடு, ஹோட்டலில் உணவு தயாரிக்கும் இடத்தையும் சுற்றிப்பார்த்தார். 1981-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட சரவண பவன், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
First published: October 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்