மாநிலங்களவையில் கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு - பாட்டுப்பாடி எம்.பிக்கள் அமளி..

வெங்கய்ய நாயுடு

என் வேதனையை தெரிவிக்கவும், இதுபோன்ற செயல்களை கண்டிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை, நேற்றிரவு நான் தூக்கமில்லாத இரவை கழித்தேன் என கண்ணீர் விட்டு கலங்கினார் வெங்கய்யா நாயுடு.

  • Share this:
மாநிலங்களவையில் சபை மாண்பை குலைக்கும் வகையில் எதிர்கட்சி எம்.எம்.பிக்கள் நடந்து கொண்டதால் மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு கண் கலங்கினார்.

நாடாளுமன்றத்தில் மழைக் கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. இன்னும் ஒரு சில நாட்களில் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறவிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் பல்வேறு காரணங்களால் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

பெகாசஸ் உளவு விவகாரம், விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரிய எதிர்கட்சி எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருவதால் மக்களவை, மாநிலங்களை என இரு அவைகளையும் நடத்தமுடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

Also Read: பாஜகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ!

விவாதங்கள் இன்றி பெரும்பாலான நேரம் அமளியிலும், ஒத்திவைப்பிலும் கடந்து போகிறது. இதனிடையே நேற்று மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் இருக்கைகள் மீது ஏறியும், அவைத்தலைவரின் இருக்கையை நோக்கி கோப்புக்களை எறிந்தும், கருப்புத் துணைகளை அசைத்தும் அத்துமீறினர். இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய அவை நேரத்தில் மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு பேசினார்.வெங்கய்ய நாயுடு கண்ணீர்:

அப்போது, ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த எதிர்பாராத செயல்கள் பெரிதும் வேதனை அளித்தது. சபை மாண்பை காக்க எதிர்கட்சி எம்.பி.க்கள் தவறிவிட்டனர் என தெரிவித்தார். வெங்கய்யா நாயுடு பேசிக்கொண்டிருக்கும் போதே எதிர்கட்சி எம்.பிக்கள் பாட்டுப் பாடி அமளியில் ஈடுபட்டதால் அவருடைய பேச்சு அதிகம் கேட்கவில்லை. பின்னர் சபையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Also Read: கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைச்சரும், அதிமுக பிரமுகரும்!

அவர் பேசும்போது,. பாராளுமன்ற அவை கோவிலாக கருதப்படும் அதே நேரத்தில், சபையில் மையப் பகுதி சன்னிதானமாகும். சபையின் மாண்பை குலைக்கும் செயலில் உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நான் மனவேதனை அடைந்தேன். சிலர் இருக்கைகளில் ஏறி நின்றனர். சிலர் மேஜைகள் மீது ஏறி நின்றனர். புனிதப் பொருட்களை மதியாது நடத்தும் அவச் செயல் இது.

என் வேதனையை தெரிவிக்கவும், இதுபோன்ற செயல்களை கண்டிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை, நேற்றிரவு நான் தூக்கமில்லாத இரவை கழித்தேன் என கண்ணீர் விட்டு கலங்கினார் வெங்கய்யா நாயுடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிது நேர அமைதிக்கு பின்னர் தொடர்ந்து பேசிய வெங்கய்ய நாயுடு, நேற்று சபையில் இந்த அளவு ஒழுங்கீன செயல்களை அரங்கேற்ற என்ன காரணம் இருக்க முடியும் என தடுமாறினேன் என்றார்.
Published by:Arun
First published: