ஹோம் /நியூஸ் /இந்தியா /

தண்டவாளத்தில் தராசை தூக்கி வீசிய போலீஸ்.. எடுக்கச்சென்றபோது ரயில் ஏறி காலை இழந்த சிறுவன்!

தண்டவாளத்தில் தராசை தூக்கி வீசிய போலீஸ்.. எடுக்கச்சென்றபோது ரயில் ஏறி காலை இழந்த சிறுவன்!

ரயில் விபத்து

ரயில் விபத்து

சொல்வதோடு நிறுத்தாமல், அதில் ஒரு போலீசார் சிறுவன் வைத்திருந்த பழங்கள், எடை போட பயன்படுத்தும் தராசை தண்டவாளத்தில் வீசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

போலீசாரின் அலட்சிய செயலால் ஒரு சிறுவனின் கால் பறிபோன சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் இர்பான் என்ற 17 வயது சிறுவன் பழ வியாபாரம் செய்துவந்துள்ளான்.

கல்யாண்பூர் பகுதி ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று போலீசார் மேற்கொண்டு வந்துள்ளனர்.. அப்போது, ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யும்படி போலீசார் கூறியுள்ளனர்.

சொல்வதோடு நிறுத்தாமல், அதில் ஒரு போலீசார் சிறுவன் வைத்திருந்த பழங்கள், எடை போட பயன்படுத்தும் தராசை தண்டவாளத்தில் வீசியுள்ளார். தண்டவாளத்தில் போலீசார் வீசிய தராசை எடுக்க சிறுவன் இர்பான் சென்றுள்ளான்.. அப்போது, வேகமாக வந்த ரயில் இர்பான் காலில் ஏறியுள்ளது.இதில், சம்பவ இடத்திலேயே இர்பானின் கால் துண்டானது. வலி தங்க முடியாமல் இர்பான் அலறியுள்ளான்.

இதையும் படிங்க:  இஞ்சினை விட்டு பிரிந்த ரயில் பெட்டிகள்.. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட விபத்து!

சிறுவன் இர்பானை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இழந்த காலை மீண்டும் பொருத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். விபத்தில் அதிக சேதம் ஏற்பட்டதால் நரம்புகளை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

போலீஸ் செய்த காரியத்தால் சிறுவன் தனது காலை இழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தராசை ரயில் தண்டவாளத்தில் வீசி சிறுவனின் கால் இழக்க காரணமான தலைமை காவலர் ராகேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் குரல் எழுப்பியதையடுத்து, தலைமை காவலர் ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் ராகேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Police arrested, Train Accident, Uttar pradesh