தமிழ்நாட்டின் சாதனைப் பெண்கள் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு அணிவகுப்பில் ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள் சார்பிலும் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளன.
குடியரசு தின விழாவில் இடம்பெறும்
சாதனைப் பெண்கள் மற்றும் தமிழர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி#RepublicDay2023 #TamilNadu #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/eNHvXIBSIH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 22, 2023
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஓராண்டிற்குப் பிறகு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி கலந்துகொள்ளவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் வீரத்தையும், பெருமையையும் குறிக்கும் வகையில் ஔவையார், வேலு நாச்சியார் உள்ளிட்டோரின் சிலைகளும், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் வடிவமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Celebrations, Republic day, Tamilnadu